ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முதலாவது சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்வு


 



வி.சுகிர்தகுமார் 0777113659
  

  ஓய்வு பெற்ற அரச சேவை மகளிரினையும்; கௌரவிப்போம் எனும் தொனிப்பொருளிலான ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முதலாவது சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்வுகள் பிரதேச சபை கலாசார மண்டபத்தில்; இன்று நடைபெற்றது.

பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில்;; இடம்பெற்ற நிகழ்வுகளில் விசேட அதிதியாக ஓய்வு பெற்ற முன்னாள் பிரதேச சபை செயலாளர் கே.விஜயராணி கலந்து கொண்டதுடன் பிரதேச சபை உப தவிசாளர் வி.ஜெகன், பிரதேச சபை செயலாளர் இ.சுரேஸ்ராம் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள்; என பலரும் கலந்து கொண்டனர்.
'; தீபங்கள் ஏற்றும் நிகழ்வு மற்றும் இறைவழிபாட்டுடன் ஆரம்பமான நிகழ்வில் தவிசாளர் தலைமையுரை ஆற்றினார்.

அவரது உரையில் மகளிர் தின நிகழ்வுகளை பிரதேச சபையினால் முதற்தடவையாக நடாத்துவது தொடர்பில் தான் மகிழ்ச்சி அடைவதுடன் பெண்களை கௌரவிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தினார்.

இதேநேரம் பிரதேச சபை உறுப்பினர்களால் மகளிர் தினம் தொடர்பாகவும் விசேட அதிதியாக கலந்து கொண்டுள்ள ஓய்வு பெற்ற முன்னாள் பிரதேச சபை செயலாளர் விஜயராணியின் சேவை தொடர்பாகவும் கூறினர். அத்தோடு அவரது காலத்தில் 2016ஆம் ஆண்டு பிரதேச சபை சிறந்த அரச சேவை நிறுவனம் எனும் விருதை பெற்றுக்கொண்டதையும் நினைவு படுத்தினர்.

இதேநேரம் இங்கு ஏற்புரை வழங்கிய முன்னாள் பிரதேச சபை செயலாளர் விஜயராணி தான் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் கடமையேற்க வருகை தந்தபோது அப்போதிருந்த தவிசாளர் மற்றும் உப தவிசாளர் உள்ளிட்டவர்கள் தன்னை பதவியேற்க விடாமல் தடுத்தமை தொடர்பில் ஆனாலும் அதனையும் தாண்டி தனியொரு பெண்ணாக இருந்து பல்வேறுபட்ட பணிகளை முன்னெடுத்ததாகவும் கூறினார்.

இதன் மூலம் பெண்களாலும் அனைத்து விடயங்களிலும் சாதிக்க முடியும் என தான் நிருபித்ததாகவும் குறிப்பிட்டார். ஆனாலும் தற்போதைய தவிசாளர் உள்ளிட்டவர்கள் தன்னை அழைத்து கௌரவித்தமை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

நிகழ்வில் கவிதை மற்றும் பாடல்கள் இடம்பெற்றதுடன் பிரதேச சபை முன்னாள் செயலாளர் விஜயராணி பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இறுதியாக பலரும் உரையாற்றிதுடன் பெண் உறுப்பினர்களுக்கும்  பிரதேச சபை உத்தியோகத்தர்களுக்கும் தவிசாளர் விசேட நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்.