திறந்து வைப்பு

 


வி.சுகிர்தகுமார் 0777113659 

சமுர்த்தி சௌபாக்கிய வேலைத்திட்ட வாரமான கடந்த 02ஆம் திகதி தொடக்கம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியீட்டம் மற்றும் மக்கள் பங்களிப்புடன் நிர்மானிக்கப்பட்ட மூன்று வீடுகள் இன்று திறந்து வைக்கப்பட்டதுடன்
புதிய வீடமைப்பிற்காக சமுர்த்தி முத்திரை லொத்தர் சீட்டிழுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வழிகாட்டலில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீடுகளை திறந்து வைத்ததுடன் வீடமைப்பிற்கான காசோலையினையும் வழங்கி வைத்தார்.

நிகழ்வுகளில் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் சமுர்த்தி திட்டமுகாமையாளர் என்.சுரேஸ்குமார் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன், சமுர்த்தி முகாமையாளர்களான கே.அசோக்குமார் மற்றும் கே.கண்ணதாசன் கிராம உத்தியோகத்தர் அருள்ராஜா உள்ளிட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேநேரம் குறித்த சமுர்த்தி சௌபாக்கிய வேலைத்திட்ட வாரகாலப்பகுதிக்குள் சமுர்த்தி வங்கி அருணலு கடன் திட்டம் மற்றும் மனைப்பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் வலுவூட்டப்படவுள்ள குடும்பங்களை அடையாளப்படுத்தும் வேலைத்திட்டம் என பல்வேறு திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.