150 மணித்தியால அரச கரும மொழித்தேர்ச்சி பயிற்சி வகுப்புக்கள்


 


.சுகிர்தகுமார் 0777113659  


இருமொழி அறிவு உடலுக்கு நல்லது என்பதுடன் பன்மொழித்தேர்ச்சியானது உடலளவிலும் மனதளவிலும் அடிப்படையான அனுகூலங்களை அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கும் மேலாக அரச உத்தியோகத்தர்கள் இரண்டாம் மொழித்தேர்ச்சி பெறுவது அவசியமானது என அரச சுற்றுநிருபங்கள் தெரிவிக்கின்றது.

இதன் அடிப்படையில்  தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் ஏற்பாட்டில் அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால அரச கரும மொழித்தேர்ச்சி பயிற்சி வகுப்புக்கள் ஆலையடிவேம்பு பிரதேச கலாசார மண்டபத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

பொது நிர்வாக சுற்று நிருபத்திற்கமைவாக அரச உத்தியோகத்தர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய அரசகரும மொழித்தேர்ச்சி தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சி வகுப்புக்கள் தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களில் இடம்பெறவுள்ளன.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இன்று ஆரம்பமான பயிற்சி வகுப்புக்களின் ஆரம்ப நிகழ்வில் பயிற்சி நெறி வகுப்பின் ஒருங்கிணைப்பாளரும் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தருமான க.சோபிதா மற்றும் வளவாளர்களாக ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர்களின் நிருவாக உத்தியோகத்தரும் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் இருமொழி வளவாளர்களான  திருமதி சரோஜா தெய்வநாயகம், சனத் ஜயசிங்க உள்ளிட்டவ்hகளும் கலந்து கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வில் வரவேற்புரை வழங்கிய நிருவாக உத்தியோகத்தர் பயிற்சி வகுப்பு தொடர்பாக விளக்கமளித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் மொழி அறிவு அரச உத்தியோகத்தர்கள் மாத்திரமன்றி அனைவருக்கும் தேவையானதொன்றெனவும் மொழியாற்றல் உள்ளவர்கள் உலகில் பல விடயங்களை சாதிக்க முடியும் எனவும் கூறினார்.

ஆகவே அரச உத்தியோகத்தர்களுக்கு அரசும்  தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகமும் வழங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்தி தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதன் பின்னராக வளவாளர்கள் தமது பயிற்சி வகுப்பினை ஆரம்பித்ததுடன் இதனை முறையாக பூர்த்தி செய்கின்றவர்களுக்கு இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் இதன் மூலம் கொழும்பு வரையில் சென்று அரச உத்தியோகத்தர்கள் சித்தியடைய வேண்டிய இரண்டாம் மொழி பரீட்சைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினர்.