அட்டன் ஆலயத்தில் விசேட வழிபாடு


 (க.கிஷாந்தன்)

 

இலங்கையில்  2019 வருடம் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை  நினைவுகூர்ந்தும், நீதியான விசாரணை வேண்டும் என பதாதைகளை காட்சியப்படுத்தியவாறும் அட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் விசேட வழிபாடுகளும் 25.04.2021 இன்று இடம்பெற்றன.

 

அட்டன் பிரதேசத்தில் ஆசிரியர் குடும்பம் உட்பட பலரும் இந்த குண்டு தாக்குதலில் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பஸ்தர்களும் இந்த வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தனர்.

 

அட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் அருட்தந்தை தலைமையில் இருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, மெழுகுவர்த்தி ஏற்றி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தனர். இதில் அட்டன் வாழ் பகுதி கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

  

கடந்த 2019ம் வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 277 பேர் உடல்சிதறிப் பலியானார்கள். 477 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.