இந்த நாடு துண்டாடப்பட்டு பகுதி பகுதியாக விற்பனை செய்யப்படுகின்றது


 


(க.கிஷாந்தன்)

மலையக மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் செய்த அநீதிக்கு இன்று இந்த நாடு துண்டாடப்பட்டு பகுதி பகுதியாக விற்பனை செய்யப்படுகின்றது. இது ஒரு துரதிஸ்டமான நிலைமை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பு கூட்டம் இன்று (25.04.2021) ஞாயிற்றுக்கிழமை பதுளை ரிவ் சைட் விருந்தகத்தில் நடைபெற்றது.மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு முன்பாக மலையக மக்கள் முன்னணியின் ஊவா மாகாணத்திற்கான புதிய காரியாலயமும் திறந்து வைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான விஜேசந்திரன் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம் மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் கே.சுப்பிரமணியம் நிதிச்செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா மகளிர் அணி செயலாளர் திருமதி சுவர்ணலதா பிரதேச சபை உறுப்பினர் திருமதி கிருஸ்ணவேனி பிரதேச சபை உறுப்பினர் சிவநேசன் பிரதி செயலாளர் பத்மநாதன் பிரதி செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான சிவஞானம் உட்பட மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய இராதாகிருஸ்ணன்

இன்று இலங்கை என்ற அழகிய தீவு ஒவ்வொரு நாட்டிற்கும் துண்டாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.அதற்கு காரணம் அன்று பெரும்பான்மை சமூகம் மலையக மக்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இந்த நாட்டில் இழைக்கப்பட்ட அநீதியாகும்.

இதன் கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலு இராதாகிருஷ்ணன் 3ஆவது மாடியை விரைவில் நிர்மாணித்துத் தருவதாக உறுதியளித்தார். ஆனால் இன்றுவரை அது ஈடேறவில்லை.

அத்துடன் மாணவர்களின் விளையாட்டு திறன்களை விருத்தி செய்து கொள்வதற்கு தேவையான விளையாட்டு மைதான வசதி கூட இல்லாத நிலையில் பாரதி மகா வித்தியாலயம் கடந்த பல வருடங்களாகவே இயங்கி வருகின்றது.

இவ்வாறான நிலையில் கடந்த வாரம் குறித்த பாடசாலையின் பழைய கட்டடம் அமைந்துள்ள பிரதேசத்தில் காணி பிரச்சினை ஒன்று தலவாக்கலை தோட்ட நிர்வாகத்திற்கும் பாடசாலைக்கும் ஏற்பட்டது. பழைய கட்டிடத்தை விடுதிகளாக அமைத்துக்கொண்டு வசித்துவரும் பாடசாலை ஆசிரியர்களின் குடும்பங்களைச் சேர்ந்த ஒருவர் தமது வீட்டு தேவைக்காக குறித்த பிரதேசத்தில் பாடசாலைக்கு சொந்தமான காணியில் வீட்டுத்தோட்டம் ஒன்றினை கடந்த நான்கு வருடங்களாக செய்து வருகின்றார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஷவின் பொதுவான வேண்டுகோளுக்கமைய வீட்டுத் தோட்டம் ஒன்றினை செய்து அதன் ஊடாக தமது குடும்பத்திற்கு தேவையான மரக்கறி வகைகளை பெற்றுக்கொள்வதாக அந்த ஆசிரியை தெரிவித்தார். இருந்தபோதிலும் மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான தலவாக்கலை தோட்ட நிர்வாகம் குறித்த காணியில் எவ்விதமான பயிர் செய்கையும் செய்யக் கூடாது என்றும் அவ்வாறு செய்யும் பட்சத்தில் பலாத்காரமாக அவை பிடுங்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தது. குறித்த காணிப் பிரச்சினையானது கடந்த மூன்று வருடங்களாகவே நடைபெற்று வருவதால், இவ்விடயம் தொடர்பில் நுவரெலியா மக்கள் பிரதிநிதிகளிடம் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனாலும் இன்றுவரை குறித்த பிரச்சினை தீர்வின்றி இழுபறி நிலையிலேயே இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டங்களை துரிதப்படுத்த வேண்டும் என்றும் பல பாடசாலைகளில் நிலவும் காணி, கட்டிடம், தளபாடங்கள், பெளதீக வளங்கள் மற்றும் ஆளணி பற்றாக்குறைகளை தீர்ப்பதற்கு முதற்கட்டமாக நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். நுவரெலியா கண்டி மாத்தளை ஆகிய மாவட்டங்களையும் மலையகத்தின் ஊவா சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கைகளை வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

அத்தோடு மலையகத்தில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல வருடங்களாக விடுக்கப்பட்டு வரும் நிலையில் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு மாணவர்களை உருவாக்கும் பாடசாலைகளில் அடிப்படைத் தேவைகளையும் பிரச்சனைகளையும் இனங்கண்டு அரசியல் பேதமின்றி சகல பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை தமிழ்பேசும் மக்கள் பிரதிநிதிகள் ஒற்றுமையாக முன்னெடுக்க வேண்டும். மலையக கல்வி சமூகத்தின் இவ் வேண்டுகோள் நிறைவேற்றப்பட வேண்டும்.