ரிஷாட் பதியுதீன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது


 முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்  குற்றப்புலனாய்த் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்,

முன்னாள் அமைச்சர் இன்று அதிகாலை கொழும்பு பௌத்தாலோக பகுதியில் உள்ள அவரது  வீட்டில் வைத்தே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்,

- Advertisement -

அத்துடன் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனும் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்,