கறுப்புக் கொடி பறக்க விடுங்கள் என்பது பாராளுமன்ற உறுப்பினர் முஸாரப்பின் -கட்சியின் கட்டுக்கோப்பை மீறும் அவருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கட்சியின் வரம்பை மீறி போர்ட் சிட்டிக்கு வாக்களித்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை  
 .
கறுப்புக் கொடி பறக்க விடுங்கள் எனும் கோரிக்கையானது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கோரிக்கையல்ல . அது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் . முஷாரப் அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடாகும்.விரைவில் கட்சியின் கட்டுக்கோப்பை மீறும் அவருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என  கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுவினர் குறிப்பிட்டனர்.

 அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு   நிந்தவூரில் இரவு -10 மணியளவில்  நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்  மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் களான கே.எம்.ஏ. ரஸாக் இ அஸ்ரப்தாஹீர் இ எம்.ஏ.அன்ஸில் ஆகியோர்  கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினர்.

மேலும் தங்கள் கருத்தில் குறிப்பிட்டதாவது

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் . முஷாரப்  அண்மையில் அவர் பொத்துவிலில் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந் துகொண்டு கட்சியின் அரசியல் உயர்பீடத் தில் நடக்காத பல செய்திகளை நடந்ததாக கூறினார் . அவரின் நடவடிக்கைகளினால் மிகப்பெரும் வேதனையுடன் மக்கள் காங் கிரசின் பிரமுகர்களும் , ஆதரவாளர்களும் இருக்கிறார்கள் கடந்த காலங்களில் மன்னராட்சியிலும் சரி , சுதந்திரத்திற்கு பின்னரான அரசாங்கங் களிலும் சரி முஸ்லிங்கள் நம்பிக்கைக்குரிய வர்களாக இருந்தார்கள் . 

ஆனால் இப்போது சிலரின் நடவடிக்கைகளினால் அந்த நிலை யில் மாற்றம் உள்ளதாகவே தெரிகிறது . கடந்த 04 ஆம் திகதியன்று நடைபெற்ற உயர்பீட கூட்டத்தில் சட்டரீதியாக பிரச்சினைகளை அணுக வேண்டி கட்சியின் சிரேஷ்ட பிரதித்தலைவரை பதில் தலைவராக தற்காலியமாக நியமித்து அதிகாரங் களை வழங்கினோம் . இதில் வேறு எவ் வித உள் நோக்கங்களுமில்லை . அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு அதிக மாக வாக்களித்த மக்கள் அம்பாறை மாவட்ட மக்களே . இங்கு கட்சிக்கென்று நிர்வாக கட்டமைப்பு இருக்கிறது . 

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் . முஷாரப்  மாவட்ட செயற்குழுவுடன் இணைந்து பணியாற்றாமல் , அந்த செயற்குழுவுடன் கலந்துரையாடாமல் தனது விருப்பத்தின் பிரகாரம் பொறுத்துவாய்ந்த ஒருவர் அறி விப்புக்களை விடுவது நல்லதல்ல . கலந்தாலோசனைகள் , தலைமைத்துவ வழிகாட்டல்களை பின்பற்றாமல் எந்த வித போராட்டங்களும் வென்றதாக வர லாறுகள் இல்லை . தலைவரை விடுவிக்க போராட்டம் நடத்தப்பட வேண்டும் என் பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை . ஆனால் பெருநாளை இப்படி எதிர்ப்பு நாளாக மாற்றுவது முறையல்ல . அண் மையில் கூட ஒரு கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்பும் , அவரது ஆதரவாளர்களும் பதாதை களை தூக்கிக் கொண்டு போராடுவது நல்லமல்ல என்றார்கள் . மறுநாள் அவர் களே முஷாரப் எம்.பியின் தலைமையில் போராட்டம் நடப்பதாக அறிவித்தார்கள் .

இப்படி பல சம்பவங்கள் உள்ளது . ஹரீன் எம்.பி சகல பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரஞ்சன் ராமநாயக் கவை விடுதலை செய்யும் வரை கருப்பு சால்வை அணியப்போவதாக அறிவித்தது போன்று எங்கள் எம்.பியும் தலைவரின் விடுதலையை வலியுறுத்தி  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் . முஷாரப் உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும்   கருப்பு சட்டை அணிந்து பாராளுமன்றம் செல்ல வேண்டும் . இது வரை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் காட்டிய எதிர்ப்பு அளவுக்கும் அவர் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு காட்டவில்லை . கருப்பு கொடி கட்டும் விவகாரமாக ஊர் பிரமுகர்களிடத்திலோ , உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கோ அவர் இதுவரை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை . கட்சியின் வரம்பை மீறி போர்ட் சிட்டிக்கு வாக்களித்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றனர் .