போர்ட் சிட்டி -சீனாவின் ஆதிக்கம் கூடிக்கொண்டு செல்லும் என்ற பயம்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


  சிறுபான்மை சமூகத்திற்கு   உள்ள வர்த்தக நலன்கள்  இல்லாமல் போகலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது
  
போர்ட் சிட்டி சட்டமூலமானது நாட்டிற்கு அபாயகரமானது.இதனால் சில சந்தர்ப்பங்களில் சீனாவின் ஆதிக்கம் கூடிக்கொண்டு செல்லும் என்ற பயம் உள்ளது.சிறுபான்மை சமூகத்திற்கு ஏலவே உள்ள வர்த்தக நலன்கள் இதனால் இல்லாமல் போகலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது  முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.

 அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடாத்திய  ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது


அரசுக்கு ஆதரவாக கடந்த காலங்களில் எமது 4 உறுப்பினர்களும் செயற்பட்டு வந்த போதிலும் தற்போது எமது தலைவரின் கருத்திற்கமைய  போர்ட் சிட்டி வாக்களிப்பில் கலந்து கொள்ளாது தவிர்ந்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். அவர்களை இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.பல்வேறு விமர்சனங்கள் இவர்களை பற்றி வெளிவந்த போதிலும் எமது கட்சிக்குள் ஒற்றுமை இருக்கின்றது.

எமது சமூகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டி உள்ளது.இந்த போட் சிட்டி சட்டமூலமானது நாட்டிற்கு அபாயகரமானது.இதனால் சில சந்தர்ப்பங்களில் சீனாவின் ஆதிக்கம் கூடிக்கொண்டு செல்லும் என்ற பயம் உள்ளது.சிறுபான்மை சமூகத்திற்கு ஏலவே உள்ள வர்த்தக நலன்கள் இதனால் இல்லாமல் போகலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது.போட் சிட்டி அலகானது ஒரு தனி நாடு போன்று இயங்கும் நிலையில் உள்ளது.இங்கு யாரும் உட்செல்ல வேண்டுமெனில் போர்ட் சிட்டி ஆணைக்குழுவின் அனுமதி பெற்றே உள் நுழைய முடியும்.

மேலும் இந்த சட்டமூலத்திற்கு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கவில்லை என்பதனால் 2/3 பங்கினை அவர்கள் பெற முடியவில்லை.தலைவர் அவர்கள் எமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கின்றது.

கட்சி மீதான நம்பிக்கை மீளவும் கட்டியெழுப்ப படுகின்றது.ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிளவு பட்டுள்ளது என எதிர்கட்சிகள் தெரிவித்த விமர்சனங்கள் தவிடுபொடியாகி எமது தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓரணியாக இயங்கக்கூடிய சக்தியை தற்போது கட்சி பெற்றுள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன் என்றார்.
--