.விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்று தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அக்கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.