டெடிபெயார் (போலிகரடி ) என்ற பொம்மையை வெருட்டியாக உபயோகப்படுத்திய விவசாயி

 


සිහාන්)


விலங்குகளின் அச்சுறுத்தல்களில் இருந்து விவசாயி ஒருவர் தனது வேளாண்மையை பாதுகாப்பதற்காக  டெடிபெயார் (போலிகரடி ) என்ற பொம்மையை வெருட்டியாக உபயோகப்படுத்தியுள்ளார்.

வேளாண்மை பயிர்செய்கை தற்போது பல்வேறு பிரதேசங்களிலும் பச்சை பசேல் என காட்சி தருகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பகுதியிலும் சிறுபோக வேளாண்மை பயிர்செய்கை ஆரம்பமாகியுள்ளது.

இவ்வாறு பயிரிடப்பட்டுள்ள வேளாண்மையை விலங்குகளின் அச்சுறுத்தல்களில் இருந்து விவசாயி ஒருவர் தனது வேளாண்மையை பாதுகாப்பதற்காக  டெடிபெயார் என்ற பொம்மை ஒன்றினை காட்சி படுத்தியுள்ளார்.

வழமையாக வெருட்டி என்ற பொருளை நிர்மாணித்தே  விலங்குகளின் நடமாட்டத்தை விவசாயிகள் கட்டுப்படுத்தி வந்தனர்.

குறித்த வெருட்டி பாணை முட்டி பழைய ஆடை அணிகலன்கள்  கொண்டு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


--

Thanks & Best Regards,


Advertisement