யாழ்ப்பாணம், அம்பாறை, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தீவிரம்..


 


நாட்டில் நேற்று மாத்திரம் ஆயிரத்து 662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் 317 பேர் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.

இதன்படி, கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 94 பேரும், கெஸ்பேவ பகுதியில் இருந்து 51 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

- A

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 193 பேரும், களுத்துறை மாவட்டங்களில் இருந்து 100 பேரும் நேற்றைய நாளில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..

மேலும் குருநாகலை மாவட்டத்தில் இருந்து 329 பேரும்,  காலி மாவட்டத்தில் 114 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 90 பேரும், கண்டி மாவட்டத்தில் 54 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 31 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மாத்தளை மாவட்டத்தில் 101 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 41 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 32 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 8 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து 95 ஆயிரத்து 975 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 11 ஆயிரத்து 493 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், 11 ஆயிரத்து 493 பேர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.