வி.சுகிர்தகுமார் 0777113659
பயணத்தடை காரணமாக தமது தொழிலை இழந்த மக்களின் வாழ்க்கை நிலையினை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வகையில் பல்வேறு சமூக அமைப்புக்கள் பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கி வருகின்றது.
இச்செயற்பாட்டில் இலங்கை இராமகிருஸ்ண மிசனும் இணைந்து பணியாற்றி வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் ஊடாக அம்பாரை மாவட்ட மக்களுக்கும் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக மாவட்டத்தின் நாவிதன்வெளி வளத்தாப்பிட்டி ஆலையடிவேம்பு பொத்துவில் ஆகிய பிரதேசங்களுக்கு 600 பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் மற்றும் அம்பாரை மாவட்ட இந்து இளைஞர் மன்ற தலைவர் த.கயிலாயபி;ள்ளையின் வேண்டுகோளுக்கமைய மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தட்சையானந்தா ஜீ மகராஜ் அவர்களினால் இப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கான மேற்பார்வை நடவடிக்கையினை அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் க.ஜெயராஜ் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் 150 பொதிகள் பிரதேச செயலகத்தின் கணக்காளர் க.பிரகஸ்பதியிடம் சுவாமியினால் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்காக வருகை தந்த சுவாமி உள்ளிட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் அரச அதிகாரிகளை வரவேற்கும் நிகழ்வு அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் சுகாதார நடைமுறைகளுடன் நடைபெற்றது. இதன் பின்னராக பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட சுவாமி உள்ளிட்டவர்கள் இல்லத்தில் நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தினையும் திறந்து வைத்தார்கள்.
தொடர்ந்து சுவாமி அவர்கள் நிவாரணப்பணியை ஆரம்பித்து வைத்ததுடன் மிகுதி பொதிகளை பிரதேச செயலக கணக்காளரிடமும் ஒப்படைத்தார்.
இதேநேரம் கிடைக்கப்பெற்ற உலர் உணவுப்பொதிகள் யாவும் நாவற்காடு மகாசக்தி கிராமம் உள்ளிட்ட கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மக்களிடம் கையளி;க்கப்பட்டது.


Post a Comment
Post a Comment