பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
கொவிட்-19 தொற்றினால் மரணமடைந்த நால்வரில் மூவர் மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் 39 வயதுடைய ஒருவரும் இந்நோய்த் தொற்றினால் மரணமடைந்துள்ளார். மரணமடைந்த நால்வரில் ஒருவர் சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவரும் அடங்குகிறார்.கடந்த 24 மணி நேரத்தினுள் கல்முனைப் பிராந்தியத்தில் அதிகப்படியாக அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயப் பிரிவில் 14 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாவிதன்வெளி பிரதேசத்தில் 10 தொற்றாளர்களும், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆறு பேரும் காரைதீவு பிரதேசத்தில் ஐவரும், நிந்தவூர் பகுதியில் நால்வரும் இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவரும் சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா இருவரும் ஆலையடிவேம்பு மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் தலா ஒவ்வொருவரும் கொவிட்-19 தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் 64 கொவிட் -19 நோயாளர்களும், மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் 105 தொற்றாளர்களும் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் 36 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, அக்கரைப்பற்று நுரைச்சோலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 988 பேரும் அட்டாளைச்சேனை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 87 பேரும் ஒலுவில் மத்திய நிலையத்தில் 20 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரி பிரிவின் கீழுள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் திருக்கோவில் பிரதேசத்தை தவிர ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் கொவிட்-19 மரணங்கள் நிகழ்ந்துள்ளமையால் இப்பிராந்தியத்தில் உள்ள அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் மேலும் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment