பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தின் மதில்கள் அழகு படுத்தப்படுகின்றன


 


வி.சுகிர்தகுமார் 0777113659  


 திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தின் மதில்கள் விழிப்பூட்டல் மிகு அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றது.

பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் ஆர்.சுவர்ணராஜின் முயற்சியின் பயனாக அதிபர் த.இந்திரன் மற்றும் அபிவிருத்தி சங்கத்தின் ஒத்துழைப்போடு இடம்பெற்றுவரும் இப்பணிகளில் பல்வேறு தரப்பினரும் நிதி உதவியினை வழங்கி பாடசாலையின் அழகுபடுத்தலுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி மற்றும் சுற்றச் சூழலை பாதுகாப்பு அழகுபடுத்தல் உள்ளிட்ட  நடவடிக்கைகளில் சமூகமும் கைகோர்த்து செயற்படவேண்டியது அவசியமானதாகும்.

அவ்வாறு செயற்படும்போதே சிறந்த வளர்ச்சியினை பாடசாலைகளும் அடைந்து கொள்ள முடியும்.

இதற்கு முன்னுதாரணமாகவே திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலய அபிவிருத்தி சங்கமும் கிராம அபிவிருத்தி சங்கமும் பொதுமக்களும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

பாடசாலையின் கல்வி அபிவிருத்தி மாத்திரமன்றி பௌதீகவள அபிவிருத்தியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக பாடசாலைக்கு தேவையான சிசிரிவீ கமரா பொருத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதுடன் பாடசாலையின் மதிலினை அழகிய சித்திரங்கள் வரைவதன் மூலமும் அழகு படுத்தி வருகின்றனர்.

மதில்களை அழகுபடுத்தும் சுவரோவியங்களை ஓவியர் மகேசன் வரைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.