விராட் கோலி,ரி20 உலகக் கிண்ணத்தை தொடர்ந்து தலைமைத்துவத்தை துறக்கிறேன்ரி20 உலக கிண்ணத் தொடருக்கு பின்னர், ரி20 தலைமைத்துவத்திலிருந்து விலகவுள்ளதாக, இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி அறிவித்துள்ளார்.

2017 முதல் இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள், ரி20 ஆகிய அனைத்து வகையான அணிகளினதும் தலைவராக இருந்து வரும் விராட் கோலி, டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை முழுமையாக வழிநடத்தும் வகையில் இம்முடிவை எடுத்துள்ளதாக, கோலி அறிவித்துள்ளார்.

தனது சமூக வலைத்தள பக்கங்களில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.