"அவர் சொல்வதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்" பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் சோயிப் அக்தர். தனது அதிவேக பந்து வீச்சால் சர்வதேச நட்சத்திர பேட்ஸ்மேன்களை எல்லாம் நடுநடுங்க வைத்தவர்.


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் மோசமான தோல்வியை சந்திக்கும்போது, அணி நிர்வாகம் மீது கடுமையான விமர்சனத்தை வைக்கக்கூடியவர். சமீபத்தில் கூட பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டில் சேர்மன் பதவியை விட வேறு எந்த பதவியையும் விரும்பவில்லை என நெத்தியடியாக பேட்டியளித்திருந்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் மற்றும் உலக கிரிக்கெட்டில் முத்திரை பதித்த முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘அக்தரை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவராக்குங்கள். சோயிப் அக்தர் பேசுவதை மக்கள் ஏன் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஒருவருக்கு நாகரிகம் இல்லையென்றால், அவருக்கு வாழ்க்கை பற்றி தெரிந்திருக்காது.