கல்முனை பிராந்தியத்தில் டெல்டா அபாயம்:


 


(நூருள் ஹுதா உமர்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட PCR பரிசோதனை மாதிரிகளில் 95 வீதமானவை டெல்டா தொற்றுக்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,, 

கடந்த 4ஆம் திகதி கல்முனைப் பிராந்தியத்தில் இருந்து பெறப்பட்ட PCR மாதிரிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக இரசாயன பகுப்பாய்வு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

18 பிசிஆர் மாதிரிகளில் 17 பிசிஆர் மாதிரிகள் கொவிட் டெல்டா வைரஸ் தொற்றுக்கும் ஒரு பிசிஆர் பரிசோதனை மாதிரி கொவிட் அல்பா வைரஸ் தொற்றுக்கும் உள்ளாகி உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியதும் மிகவும் அச்சுறுத்தலானதும் என்பதனால் பொதுமக்கள்  நிலைமையைக் கருத்திற்கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்வதோடு, சுகாதார நடைமுறைகளை  இறுக்கமாக பின்பற்றி தடுப்பூசியை முறையாகப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்