காணி சீர்திருத்த அதிகார சபையின் புதிய கட்டிடம் திறக்கும் நிகழ்வு



 எம்.ஜே.எம்.சஜீத்)


 


காணி  சீர்திருத்த  ஆணைக்குழுவின்  பதுளை மாவட்டத்திற்கான காணி சீர்திருத்த அதிகார சபையின் புதிய கட்டிடம்  திறக்கும் நிகழ்வு காணி சீர்திருத்தம் ஆணைக்குழுவின் தலைவர்  வழக்கறிஞர்  நிலாந்த விஜேசிங்க தலைமையில் நேற்று (20) கெளரவ  காணி அமைச்சர்  எஸ்ஏம் . சந்ரசேன அவர்களால் உத்தியோகம் பூர்வமாக  திறந்து  வைக்கப்பட்டதுஅத்துடன் அதிமேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய  கொள்கையின் அடிப்படையில் 150 காணி உறுதி பத்திரங்கள் மூவின மக்களுக்கும் வழங்கப்பட்டன.

 

இந்நிகழ்வில்  தொழிலாளர் அமைச்சரும் பதுளை  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ நிமல் சிரிபால டி சில்வாபதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு  குழு தலைவருமான கௌரவ டிலான் பெரேராகிராமிய பாடசாலை வீதி உட்கட்டமைப்பு இராஜங்க அமைச்சர் கௌரவ தேனுக விதான கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அரவிந்த குமார்கௌரவ சுதர்சன தெனிபிடிய மற்றும் பதுளை மாவட்ட காணி சீர்திருத்த அதிகார சபையின் பணிப்பாளர் நிமல் குமார ஹதரசிங்க ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்