வி.சுகிர்தகுமார் 0777113659
அக்கரைப்பற்று பனங்காடு ஸ்ரீ நாககாளி அம்மன் ஆலய பிரதமகுரு உள்ளிட்ட பூசகர்கள் ஜவர் ஆலய நிருவாகத்தினரால் சிறப்பு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அம்மனது வருடாந்த உற்சவ திருவிழா மற்றும் சக்தி விழாவின் எட்டாம் சடங்குடன் நிறைவுற்ற இன்றைய நாளில் பூசகர்களது இறைசேவையினை பாராட்டி இவ்வாழ்த்துப் பத்திரங்களும் பட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கமைவாக அம்மன் ஆலய பிரதம குருவும் ஆலயத்தை அமைத்துக் கொடுத்தவருமான சிவசக்தி உபாசகர் சிவஸ்ரீ வி.நடராஜா 'இறைபணித்திலகம் தேவிகான வினோதன்' எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சக்தி விழாவின் தீமிதிப்பு சடங்கினை வருடந்தோறும் நடாத்தி வரும் உற்சாடன பானு தேவி பூ;ஜா துரந்தரர் சக்தி பாவனர் சிவத்திரு இ.யோகானந்தம் மற்றும் உதவி பூசகர்களான இளஞ்சுடர் அம்மன் திருத்தொண்டர் சோ.கஜேந்திரன் இளஞ்சுடர் அம்மன் திருத்தொண்டர் யோ.மோகன்ராஜ் ஆகியோர்களுக்கு வாழ்த்துப்பாவும் வழங்கப்பட்டது. மேலும் ஆலயத்தின் உதவி பூசகர் அம்மன் திருத்தொண்டர் மா.ஆனந்தஜோதி சக்தி வேந்தர் எனும் சிறப்பு பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கௌரவிப்பு நிகழ்வில் ஆலய நிருவாகத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment