.
சுகிர்தகுமார் 0777113659
நஞ்சற்ற நெற் செய்கையின்; உற்பத்தியை அதிகரிக்கும் செயற்றிட்டத்தின் கீழ் சேதனப்பசளையினை பயன்படுத்தி பரசூட் முறையில் நெற்பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளும் செயன்முறை களப்பயிற்சிகள் அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் நிலைத்தினால்; வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் நிலைத்திற்குட்பட்ட தோணிக்கல் வயல் பிரதேசத்தில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் உற்பத்தி செலவினை குறைத்து அதிக இலாபத்தினை பெற்றுக்கொள்ளும் முகமாகவே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் நிலைத்தின் பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.நிப்றாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நெற்பாடவிதான சிரேஸ்ட உத்தியோகத்தர் ஏ.ஜ.ஏ.பெரோஸ் மற்றும் விவசாய விரிவாக்கல் காரியாலயத்தின் உத்தியோகத்தர்களான ரி.ஏ.தசிலா பிரியதர்சினி, எம்.ஏ.சில்மியா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தோணிக்கல் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட நவரெட்ணராஜா எனும் விவசாயின் ஒத்துழைப்போடு அவருக்கும் சொந்தமான காணியிலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்திற்கு இன்று களவிஜயத்தினை மேற்கொண்ட உத்தியோகத்தர்கள் பரசூட் விதைப்பு முறை தொடர்பிலான பயிற்சிகளை வழங்கியதுடன் விதைப்பு நடவடிக்கையிலும் இணைந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த நெற்பாடவிதான சிரேஸ்ட உத்தியோகத்தர் ஏ.ஜ.ஏ.பெரோஸ் இலங்கையில் காணப்படும் விவசாயிகளின் முக்கிய பிரச்சினை களை கட்டுப்படுத்தலாகும். அடுத்தது உற்பத்தி செலவிற்கு ஈடு செய்யாத வகையில் விளைச்சல் குறைந்து காணப்படுதல். இவற்றிக்கெல்லாம் தீர்வு காண்;பதற்காகவே விவசாய திணைக்களம் பல்வேறு புதிய முறைகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது.
இதன் அடிப்படையிலே பரசூட் எனும் விதைப்பு முறையினை நாம் அமுல்படுத்தியுள்ளோம். இம்முறையில் நெற்செய்கை மேற்கொள்ளும்போது களைகள் கட்டுப்படுத்தப்படும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் களைநாசினி பயன்பாடும் தேவையற்று போகும். இதன் மூலம் நஞ்சற்ற உற்பத்தியை நாம் மேற்கொள்ள முடியும். அத்தோடு நெற்பயிர்கள் குட்டிவிடும் சந்தர்ப்பங்களும் அதிகரித்து அதனூடாக விளைச்சலும் அதிகரிக்கும் என்றார்.

Post a Comment
Post a Comment