கருவாட்டுக்கடையை நாசமாக்கிய விசமிகள்



 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று சாகாம வீதி அர்ச்சனா திரையரங்கின் முன்னால் அமைந்திருந்த சிறிய கருவாட்டுக்கடை ஒன்றினை நேற்றிரவு நாசமாக்கிய சில விசமிகள் அங்கிருந்த பெறுமதியான தராசு ஒன்றினையும் களவாடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு பலத்த மழை பெய்த நேரம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் கடையின் உரிமையாளர் இன்று பொலிசாரிடம் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.
குறித்த கடையானது சிறியதாக ஆரம்பிக்கப்பட்டு கடை உரிமையாளரின் முயற்சியால் சற்று பெரிதாக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட நிலையிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடையின் பின்புறத்தை உடைத்து உள்நுழைந்த கள்வர்கள் அங்கிருந்த கருவாடுகளை அருகில் இருந்த நீர்நிறைந்த வளவினுள் வீசி எறிந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த டிஜிட்டல் தராசினையும் எடுத்து சென்றுள்ளனர்.
இந்நடவடிக்கையினை பெரிதும் கண்டிக்கும் பிரதேச மக்கள் வளர்ந்துவரும் வியாபாரிகளுக்கு இச்செயற்பாடு பயத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் குறித்த கள்வர்களை சட்டத்தின் முன் நிறுத்த பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேநேரம் அன்மைக்காலமாக திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.