பாடசாலைகளுக்கு,விடுமுறை காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது




 


நத்தார் பண்டிகையை முன்னிட்டு, அரச மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, இம்மாதம் 24ம் திகதி வழங்கப்படும் விடுமுறை, ஜனவரி மாதம் 2ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை மூலம் அறிவித்துள்ளது.