தேசிய வரவு செலவு திட்ட முன்னுரிமைகள் தொடர்பான கலந்துரையாடல்==============================
(நூறுள் ஹுதா உமர்,சர்ஜுன் லாபீர்)
வரவுசெலவுத்திட்டம் 2022 இற்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தியின் பயன்கள் விரைவாக மக்களுக்கு சென்றடையும் வகையில் கிராம மட்ட பிராந்திய அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற "கிராமத்துடன் உரையாடல்" கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி கருத்திட்ட முன்மொழிவுகளை செயற்படுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் என்பற்றைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களினூடாக முழு வேலைத்திட்டத்தையும் முன்னுரிமை வேலைத்திட்டமாக செயற்படுத்துவதற்கான கல்முனை பிரதேச செயலக பிரிவுக்கான ஆரம்பகட்ட கூட்டம் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இன்று(24) பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்ற மேற்படி "கிராமத்துடன் உரையாடல்" கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டதோடு இவ்வேலைத்திட்டம் தொடர்பிலான சிறப்புரையாற்றினார்.
மேலும் தலைமைப்பீட சமூர்த்தி முகாமையாளர் யூ.எல்.எம் சலீம் கலந்துகொண்டு இவ்வேலைத்திட்டம் பற்றிய விளக்க உரையும் வழங்கப்பட்டது.
பிரதேச செயலக மட்டத்தில் கிராமிய அபிவிருத்தி கருத்திட்ட முன்மொழிவுகளை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் பற்றிய விளக்கம் கணக்காளர் யூ.எல்
ஜவாஹிர் அவர்களினால் வழங்கப்பட்டது.
தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய் நிலையினால் ஏற்படுத்தப்பட்டுள்ள குறுகிய கால சவால்களுக்கு கவனம் செலுத்துவதன் மூலம் கிராமிய மக்களின் சிதைக்கப்பட்டுள்ள

Post a Comment
Post a Comment