நீதி அமைச்சு, சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்களுக்கு மிகவும் நெருக்கமாக கொண்டு செல்வதற்காக விசேட நடமாடும் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் முதற்கட்டமாக, வடமாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு, எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில், பொது மக்களைப் பாதிக்கும் சட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளதுடன், நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவுள்ளது.

Post a Comment
Post a Comment