கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் 200வது கொடியேற்ற நினைவு முத்திரை வெளியிடுதல்
கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் 200வது கொடியேற்ற நினைவு முத்திரை வெளியிடுதல்==============================
(சர்ஜுன் லாபீர்)
கல்முனை கடற்கரைப் பள்ளி வாசல் நாஹூர் ஆண்டகையின் 200வது கொடியேற்ற விழா எதிர்வரும் ஜனவரி 04ம் திகதி ஆரம்பமாக இருப்பதனை முன்னிட்டு இன்று(29) அது தொடர்பான விசேட கூட்டம் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப் தலைமையில் கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றது.
200வது கொடியேற்ற விழாவினை இம் முறை சிறப்பாக அரச விழாவாக கொண்டாடுவதற்கு இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன், 200வது நினைவாக நினைவு முத்திரை ஒன்றினை எதிர்வரும் ஜனவரி 06ம் திகதி வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி முத்திரை வெளியீட்டு நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்
ஹரீஸ் அவர்களின் அழைப்பின் பேரில் வெகுசன ஊடகத் துறை அமைச்சர் டலஸ் அழகபெரும கலந்து கொண்டு உத்தியோக பூர்வமாக முத்திரையினை வெளியிட்டு வைக்கவுள்ளார்.

Post a Comment
Post a Comment