சக்குராய்” விமான நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து விமான சேவைகளையும் உடன் அமுலுக்குவரும் வகையில் ரத்து செய்ய சிவில் விமான சேவைகள் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை, இந்த நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் D.V.ஷானக்க தெரிவிக்கின்றார்.
இந்த விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டாவது விமானமும் இன்று விபத்துக்குள்ளான நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
பயாகல கடற்கரையோரத்தின் இந்த விமான நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானமொன்று கடந்த 22ம் திகதி அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அத்துடன், அதே விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான மற்றுமொறு விமானம் நீர்கொழும்பை அண்மித்த பகுதியில் இன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்த மூவர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Post a Comment
Post a Comment