ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையிலும் சுகாதார மேம்பாட்டு கழகம் -மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும்



 


வி.சுகிர்தகுமார் 0777113659 


 பாடசாலைகளில் சுகாதார மேம்பாட்டு கழகத்தினை உருவாக்கி அதன் மூலம் சுகாதார செயற்பாடுகளை சிறப்பாக கொண்டு செல்லும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையிலும்  சுகாதார மேம்பாட்டு கழகம் உருவாக்கப்பட்டு அதன் அங்கத்தவ மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டதுடன் பாடசாலை மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி அளிக்கப்பட்டு சின்னம் சூட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
புhடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் காரைதீவு வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் என்.அருந்திரன் ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி அதிகாரி பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி பி.மயூரன் சுகாதாரமும் உடற்கல்விக்குமான உதவிக்கல்விப்பணிப்பாளர் எச்.நைறூஸ்கான் பிரதி அதிபர் ரி.ஜெயந்தன் பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் பி.தணிகாசலம் உள்ளிட்ட ஆசியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அதிதிகளின் உரை இடம்பெற்றதுடன் சுகாதார மேம்பாட்டு கழக அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும்  மூன்று கட்டங்களாக இடம்பெற்றதுடன் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இதன் பின்னராக உரையாற்றிய அதிதிகள் பாடசாலையின் கல்வி வளர்ச்சி மற்றும் அதனூடாக அடைந்துள்ள வெற்றி இலக்கு தொடர்பிலும் மாணவர்களின் திறமை தொடர்பிலும் பாராட்டி உரை ஆற்றினர்..