கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200ஆவது வருடாந்த கொடியேற்ற விழா



 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200ஆவது வருடாந்த கொடியேற்ற விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

 ஜனவரி 04ம் திகதி(நாளை ) ஆரம்பமாக உள்ள இவ் 200 ஆவது கொடியேற்ற விழாவினை இம் முறை சிறப்பாக நடாத்துவதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதற்கமைய கொரோனா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்குமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின்  வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர் . எம் . அஸ்மி  வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
 
இதே வேளை இவ்விடயம் தொடர்பில்   ஆராயும் மீளாய்வு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கல்முனை மாநகர முதல்வர் செயலக கேட்போர் கூடத்தில்   ஞாயிற்றுக்கிழமை (02) மாலை நடைபெற்றது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபின் ஆலோசனையின் பேரில்இ மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இக்க்கூட்டத்தில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார்இ மாநகர சபை உறுப்பினர்காளான எம்.எஸ்.எம்.நிசார்இ எம்.எஸ்.எம்.ஹாரிஸ்இ மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர்இ வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.அமீர், சுகாதாரப் பிரிவு முகாமைத்துவ உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக் ஆகியோருடன் கல்முனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் நாகூர் ஆண்டகை தர்ஹா என்பவற்றின் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் உள்ளிட்ட நிர்வாகிகளும் மற்றும் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.