ஹொக்கி லயன்ஸ் கழகத்திற்கு புதிய யேர்சி அறிமுகம்.
(காரைதீவு நிருபர் சகா)
காரைதீவு ஹொக்கி லயன்ஸ் கழகத்திற்கு புதிய சீருடையை அருளானந்தம் சமூக அறக்கட்டளை நிதியம் ( அஸ்கோ) வழங்கியுள்ளது.
ஹொக்கி லயன்ஸ் கழகத்திற்கு எதிர்வரும் காலங்களில் அஸ்கோ எனப்படும் அருளானந்தம் சமூக அறக்கட்டளை நிதியம் அனுசரணை வழங்க விருக்கிறது .
ஜேசி அறிமுக நிகழ்வு காரைதீவு விபுலானந்த விளையாட்டு மைதானத்தில் கழக தலைவர் த.லவன்
தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழக ஆலோசகர் காளான் வி.ரி. சகாதேவராஜா தி. உமா சங்கரன் மற்றும் அஸ்கோ அமைப்பின் சார்பில் அதன் பிரதிகளான எஸ். நந்தகுமார் எம். சுந்தரராஜன் கே. லோகேந்திரராஜா மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்களான எல்.சுலக்சன் வி.பாஸ்கரன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் அஸ்கோ அனுசரனையுடன் புதிய ஜேர்சி வெளியிட்டு வைக்கப்பட்டது.

Post a Comment
Post a Comment