மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பரீட்சை எழுதினர்



 .


சுகிர்தகுமார்  


  அம்பாரை மாவட்டத்திலும் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இன்று(23) ஆரம்பமானதுடன் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் மிகவும் ஆர்வத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்ததை காணமுடிந்தது.
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை ஆரம்பித்ததுடன் அக்கரைப்பற்று இராமகிருஸ்ணா தேசிய பாடசாலையிலும் பரீட்சை நடைபெற்றது.
கொரோனா தாக்கம் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம் போன்ற பல்வேறு காரணிகள் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் தாக்கம் செலுத்தியபோதும் மாணவர்கள் இறைவழிபாட்டின் பின்னர் ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராகி வருகை தந்தைதையும் அவதானிக்க முடிந்தது.
ஆயினும் பெற்றோர்கள் பலர் பாடசாலைக்கு முன்பாக கூடியிருந்ததுடன் மாணவர்களின் கல்வி நடவடிக்கை சீராக நடைபெறவில்லை எனும் கவலையுடன் சிலர் உரையாடியதையும் அவதானிக்க முடிந்தது.
 வலயக்கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன்  வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின்  கீழ் பரீட்சை நிலையங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.