செப்டெம்பர் மாதம் 10ம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினம்



 


தற்கொலை தடுக்கப்படக் கூடியதே என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்காக வருடாந்தம் செப்டெம்பர் மாதம் 10ம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

அதனை முன்னிட்டு இன்றைய தினம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் உளநல பிரிவும் இணைந்து நடாத்திய விழிப்புணர்வு நிகழ்வுகள் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டுதலில் இடம்பெற்று முடிந்தது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்ட விழிப்புணர்வு நடைபவனியானது பிரதேச செயலகத்தை அடைந்ததும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்தியர் அவர்களினால் பிரச்சனைகளை கையாள்வது தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வானது நடாத்தப்பட்டது.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகெளரி தரணிதரன் , களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திரு கதிர்காமநாதன் புவனேந்திரநாதன் , களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி திரு அமரசேன உதயசூரிய , உளநல வைத்தியர் திருமதி யூடி ரமேஷ் ஜெயக்குமார் சகாயதர்ஷினி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்