ரன்வல பிரதேசத்தில் உயிர் நீத்தோர் இவர்கள்




 கேகாலையில் அகோர விபத்து-மூவர் பலி; இருவர் காயம்

கேகாலையில் இன்று பதிவான பல வாகனங்கள் மோதுண்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்தில் 02 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை ரன்வல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கேகாலையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மூன்று மோட்டார் சைக்கிள்கள் கண்டி நோக்கிப் பயணித்த வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 27 வயதுடைய துல்ஹிரிய மற்றும் வெயாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வேன் சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணமெனவும் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.