(வி.சுகிர்தகுமார் )
2022ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டிகளில் திருக்கோவில் கல்வி வலயம் 4 தங்கப்பதக்கம் அடங்கலாக 13 பதக்கங்களை வென்று தொடர்ந்து சாதனை படைத்துள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டியின்; திருக்கோவில் கல்வி வலயம் சார்பாக 16 மணவர்கள் பங்கு பற்றிய நிலையில் 04 தங்கம் 06 வெள்ளி 03 வெண்கலம் என 13 பெற்று வலயத்திற்கு பெருமை சேர்த்தனர்.
இதில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவர்கள் 02 தங்கம் 04 வெள்ளி 03 வெண்கலப்பதங்கங்களை பெற்றதுடன் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மகாவித்தியாலய மாணவர்கள் 02 தங்கப்பதங்கங்களையும் கண்ணகிகிராமம் கண்ணகி வித்தியாலய மாணவர்கள் 02 வெள்ளிப்பதங்கங்களையும் வென்றெடுத்தனர்.
குறித்த மாணவர்கள் யாவரும் கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ராம் கராத்தே சங்கத்தில் பயிற்சியை பெற்றவர்கள் என்பதுடன் இவர்களுக்கான பயிற்சியை சிகான். கே.கேந்திரமூர்த்தியின் வழிகாட்டலில் சென்சி கே.ராஜேந்திரபிரசாத், சென்சி கே.சாரங்கன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த வெற்றி குறித்து பற்றி கருத்துத் தெரிவித்த சிகான். கே.கேந்திரமூர்த்தி, குறித்த வெற்றியை பெறுவதற்கு தன்னோடு இணைந்து பயிற்சிகளை வழங்கிய கே.ராமிலன் மற்றும் கே.சாரங்கன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்ததுடன், இயன்மருத்துவ உதவியினை வழங்கிய இயன்மருத்துவர் கே.கரன்ராஜ் மற்றும் பெற்றோர்கள் கிழக்கு மாகாண காரத்தே சங்க தலைவர் உள்ளிட்ட நிருவாகத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.

Post a Comment
Post a Comment