அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரியில் கணித முகாம்



 


( வி.ரி. சகாதேவராஜா)


கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால்  நடைமுறைப்படுத்தப்படும் ஜெம் செயத்திட்டத்தின்  கீழ்  கணித முகாம் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண
கல்லூரி ஆராதனை மண்டபத்தில்    நேற்று(23) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி அதிபர் ஜே. ஆர். டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக
ஓய்வு பெற்ற கணித பாட உதவி கல்விப் பண்ணிப்பாளர் கே. பாலதாசன் திருக்கோவில் வலயத்தின் கணித பாட உதவி கல்விப் பணிப்பாளர் கு.தயாருபன்,கணித பாட ஆசிரியர் ஆலோசகர் கே.சசிகரன், மற்றும்  இராமகிருஸ்ணா கல்லூரியின் பிரதி அதிபர்களான வ. ஜெயந்தன், ரி.மதியழகன் மேலும் கணித பாட ஆசிரியர் ஜனாப் சத்தார் ஆகியோர் கலந்து கொண்டனர் .

சிறப்பு அம்சமாக மாணவர்களின் வினாவிடைப் போட்டி மற்றும் கணித வில்லுப்பாட்டு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள்   அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன