இளம் எழுத்தாளர் மேம்பாட்டு ஒன்று கூடல்



 வி.சுகிர்தகுமார் 


  கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இளம் எழுந்தாளர்களை ஊக்குவிக்கும் முகமான இளம் எழத்தாளர் மேம்பாட்டு கூடல் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

மாகாண பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சனின் வழிகாட்டலில் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக்கின் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜௌபர் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் கலந்து கொண்டார்.

இறைவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்புரை மற்றும் தலைமையுரை இடம்பெற்றது. தலைமை உரை ஆற்றிய அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதை அடிப்படையாக கொண்டே மாகாண பணிப்பாளர் இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளார். ஆகவே சமூக மட்டத்தில் தற்போது குறைந்து கொண்டு செல்லும் எழுத்தாளர்களின் எண்ணிக்கையினை இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரிக்கச் செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதேநேரம் இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் கலை என்பது நம் வாழ்வில் இணைந்திருக்க வேண்டியது. அது இறைவனால் கொடுக்கப்படும் வரம். சிலருக்கு இயற்கையாகவே கலைத்திறன் இருக்கும். அவர்கள் இலகுவாக தமது திறனை வெளிப்படுத்துவர்.  சிலருக்கு கலைத்திறன் உள்ளிருக்கும். வெளிக்கொண்டுவரப்படுவதில்லை. அவ்வாறு உள்ளிருக்கும் கலைத்திறனை வெளிக்கொண்டுவரும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் அவர்களும் கலைஞர்களாக உருவாக கூடும் என்றார்.

இளம் எழுந்தாளர்களை ஊக்குவிக்கும் முகமான இளம் எழத்தாளர் மேம்பாட்டு கூடலின்  வளவாளராக ஓய்வு பெற்ற அதிபர் கே.தவராசா கலந்து கொண்டு இளம் எழுத்தாளர்களுக்கான பயிற்சியை வழங்கினார்.

நிகழ்வில் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வெஸ்டர் இந்து கலாசார உத்தியோகத்தர் சர்மிளா மற்றும் கோகுலதாஸ் ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவை தலைவர் க.கிருஸ்ணமூர்த்தி உள்ளிட்ட பாடசாலை மாணர்கள் இளம் எழுத்தாளர்கள் என பலர் கலந்து கொண்டனா