கள ஆய்வு



 


(வி.ரி. சகாதேவராஜா)


 கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவின் பணிப்பாளர் மேஜர் நசிமுதீன் கடந்த வாரம் அம்பாறை மாவட்ட தேசிய பாடசாலைகளுக்கு விஜயம் செய்து கள ஆய்வை மேற்கொண்டார்.

 அந்தந்த வலயக்கல்விப் பணிமனையின் கல்வி சார் உத்தியோகத்தர்களுடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டார்.

 இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்து கள ஆய்வை மேற் கொண்டார்.இதன்போது கிழக்கு மாகாண கல்வி திணைக்கள உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் மற்றும் சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் எஸ் எம் எம் அமீர் தலைமையிலான குழுவினரும் ஆய்வில் கலந்து கொண்டனர்.