விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்





 அனுராதபுரம்-பாதெனிய வீதியின் தலதாகம சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச்சென்று மரமொன்றில் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.