ரோட்டரி - 3220 ஆளுநர் அவர்களின் திருகோணமலை விஜயம்



 


ரோட்டரி - 3220 ஆளுநர் அவர்களின் திருகோணமலை விஜயம்


ரோட்டரி இலங்கை மாவட்ட - 3220 ஆளுநர் புபுது டி  சொய்சா (Pubudhu de Zoysa) 15-10-2022 அன்று, திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்தார்.

ஆளுநரின் செயலார் திரு குமார்  சுந்தராஜ் அவர்களும் மற்றும் உதவி மாவட்ட செயலார் திரு அஜித் ஜெயவிக்கரமாவும் அவருடன் இணைந்து கொண்டார்கள் .

திருகோணமலை ரோட்டரி கழக தலைவர் - கிட்ணதாஸ் விருந்தினர்களை வரவேற்றுவரவேற்புரையை நிகழ்த்தினார் .

செயலாளர் S. ஜெய்சங்கரினால் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகளின் அறிக்கை பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.

புதிய உறுப்பினராக செலான் வங்கி  மேனேஜர் - திரு. .S. .ஹரிதவர்ணன் அவர்கள் திருகோணமலை ரோட்டரி கழகத் தில் இணைந்து கொண்டார்.

ஆளுநர் புபுது டி  சொய்சாதமது உரையில் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைககளை பாராட்டியதுடன் மேலும் அதிக தரமான இளம் உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

2023-2024 
வருடத்துக்கான தலைவராக தெரிவு செய்யப்படட வைத்தியர் சௌந்தரராஜன் நன்றியுரை நிகழ்த்தினார்.