முன்னாள் நீதிபதி உயர் திரு சிறீகுகன் ஶ்ரீஸ்கந்தராஜா*






*உயர் திரு சிறீகுகன் ஶ்ரீஸ்கந்தராஜா* 

(ஓய்வு பெற்ற கனேடிய குடிவரவு நீதிபதி,)


தோற்றம் - 14.08.1942

மறைவு - 09.10.2022


மனித உரிமைக்காகவும், இன நல்இணக்கத்திற்காகவும் மிகவும்

கடுமையாக உழைத்தவர். தொண்டமனாற்றை பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், லண்டன், ரொறன்ரோவை வாழ்விடமாகவும் கொண்ட  திரு. சிறீகுகன் ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 09 ஒக்ரோபர் 2022 கனடா, ரொறன்ரோவில் காலமானார்.                     


அன்னார் காலஞ் சென்ற

உயர்நீதிமன்ற நீதிபதி (Judge of the Supreme Court of Ceylon)  திரு. பொன் ஶ்ரீஸ்கந்தராஜா, காலஞ் சென்ற கண்மணி ஶ்ரீஸ்கந்தராஜா அவர்களின் அன்பு மகனும், 

திருமதி ஜனெற் (Janet) ஶ்ரீஸ்கந்தராஜா அவர்களின் அருமைக் கணவரும், அன்யாவின் (Anya) ஆசை மிகு தந்தையாரும், காலஞ் சென்ற Barrister சுசிலா தெ. மூர்த்தி மற்றும் வைத்திய கலாநிதி இந்திரா சிவயோகம், கலாநிதி ஶ்ரீபவன் ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரது அன்பு சகோதரருமாவார். 


அன்னாரின் பூதவுடல் ஒக்ரோபர் 16ம் திகதி 2022, மாலை 6 மணி தொடக்கம் 9 மணி வரைக்கும் Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham இல் பார்வைக்கு வைக்கப்படும் என்பதையும், மறுநாள் காலை 8.30 தொடக்கம் 11.00 மணிக்கு இந்து முறைப்படி கிரியைகள் நடைபெற்று, 11.30க்கு அருகில் இருக்கும் Highland Hills Funeral Home, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0  இல் தகனம் செய்யப்படும் என்பதையும் ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம்.                   


இப்படிக்கு,                      

சகோதரர் - ஶ்ரீபவன் ஶ்ரீஸ்கந்தராஜா

416 493 2946

மைத்துனி - உஷா ஶ்ரீஸ்கந்தராஜா

416 564 2946