நூருல் ஹுதா உமர், எம்.என்.எம்.அப்ராஸ்
“சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம் “ எனும் தொனிப்பொருளினை மையமாக கொண்டு உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை கல்வி வலய கிரீன் பீல்ட் கமு/கமு/றோயல் வித்தியாலய சிறுவர் தின நிகழ்வுகள் சனிக்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது.
பிரபல அரசியல், சமூக செயற்பாட்டாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ஏ கலீலுர் ரஹுமானின் ஏற்பாட்டில், சிரேஸ்ட உளவளத்துணையாளர் ராசிதா நௌசாதின் அனுசரணையில் பாடசாலை அதிபர் எம்.எச். எம். அன்ஸார் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றதுடன் சிறார்களை மகிழ்வித்து உற்சாகமூட்ட தரம் 1, தரம் 2 மற்றும் தரம் 3 ஐ சேர்ந்த மாணவர்களுக்கு சுமார் 100 புத்தகப்பைகள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக எம்.ஏ கலீலுர் ரஹுமான், ராசிதா நௌசாத், உட்பட பிரமுகர்கள் கிறீன் பீல்ட் பள்ளிவாசல் நிர்வாகிகள், மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்வுகள், குழு நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றதுடன் சிறுவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.


Post a Comment
Post a Comment