வி.ரி.சகாதேவராஜா
வித்யாரம்பம் என்பது ஒரு இந்து சமய சடங்காகும். இது பாரம்பரியமாக விஜயதசமி நாளில் செய்யப்படுகிறது.
இந்துக்களின் ஏடுதொடங்கும் வித்தியாரம்ப நிகழ்வு செய்வதற்கு இன்று(05) புதன்கிழமை காலையே பொருத்தமாகும் என கிழக்கின் பிரபல குருக்களான காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனாலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸவரக்குருக்கள் தெரிவிக்கிறார்
.
சரி இனி வித்தியாரம்பம் பற்றி பார்ப்போம்..
வித்யாரம்பம் விழாவானது ( வித்யா என்றால் 'அறிவு' ஆரம்பம் என்றால் 'துவக்கம்') கோயில்களிலும் வீடுகளிலும் பாடசாலைகளிலும் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நாளில் கோயில்களுக்கு வந்து தங்கள் குழந்தைகளை கற்றலில் ஈடுபடுத்துவது வழக்கம் .
எழுதத் துவக்கும் சடங்கின்போது பொதுவாக மந்திரத்தை எழுதி துவங்கப்படுகிறது. குழந்தைகள் தமிழெழுத்தை ஆரம்பிக்கும்போது 'ஓம்' என்றோ 'அ' என்றோ துவங்குவது வழக்கம் .
இந்த சடங்கின்போது ஒரு குருவின் முன்னிலையில் மந்திரமானது மணல் அல்லது அரிசி பரப்பப்பட்ட தட்டில் குழந்தையின் விரல் பிடித்து எழுதப்படுகிறது. பின்னர் குருவானவர் குழந்தையின் நாக்கில் மந்திரத்தை தங்கத்தைக் கொண்டு எழுதுகிறார்.
மணலில் எழுதுவது நடைமுறையை குறிக்கிறது. தானியங்களில் எழுதுவது அறிவைப் பெறுவதைக் குறிக்கிறது. இது செழிப்பைக் குறிக்கிறது. தங்கத்தைக் கொண்டு நாக்கில் எழுதுவது கல்விக் கடவுளின் அருளைக் குறிக்கிறதுஇ இதன் மூலம் ஒருவர் உண்மையான அறிவுச் செல்வத்தை அடைவதாக கருதப்படுகிறது.
இப்போதெல்லாம் வித்யாரம்பம் விழாவானது அனைத்து சாதிகள் மற்றும் சமயத்தைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுகிறது. சடங்குகளில் சிறிய வேறுபாடுகள் உள்ளன.
இந்த நாளில் குழந்தைகளுக்கு முறையாக இசை நடனம் மொழிகள் நாட்டுப்புற கலை போன்றவை கற்பிப்பது துவக்கப்படுகிறது.


Post a Comment
Post a Comment