(க.கிஷாந்தன்)
புஸ்ஸலாவை, இந்து தேசியக் கல்லூரியின் நவராத்திரி கலைவிழா, கல்லூரி அதிபர் எஸ். சந்திரமோகன் தலைமையில், கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜரட்னமும், சிறப்பு அதிதியாக கம்பளை கல்வி வலயத்தின் தமிழ்க் கல்வி பிரிவு பணிப்பாளர் ஏ.எஸ். எழில்பிரியாவும் கலந்து சிறப்பித்தனர். பழைய மாணவர் சங்க செயலாளர் எம். கவாஸ்கரும் பங்கேற்றிருந்தார்.
நவராத்திரி விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்வுகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.
ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
.jpg)

Post a Comment
Post a Comment