கருங்கோழிக்குஞ்சுகளை,இலவசமாக வழங்கும் திட்டம்



 .


சுகிர்தகுமார்

  பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் முகமாக வருமானம் குறைந்த மக்களுக்காக அரிய இன கருங்கோழிக்குஞ்சுகளை அக்கரைப்பற்று தக்வா ஜும்மா பள்ளிவாசல் நிருவாக சபையினரால் இலவசமாக வழங்கும் திட்டம்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் அவர்களின் வழிகாட்டலில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

பிரதேச செயலக மண்டபத்தில் கோழி;க்குஞ்சுகள் வழங்கும் நோக்கம் மற்றும் கருங்கோழியின் சிறப்புக்கள் இதன் மூலம் மக்கள் அடையக்கூடிய அதிகவருமானம் பற்றி விளக்கமளிக்கும் கூட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் அக்கரைப்பற்று தக்வா ஜும்மா பள்ளிவாசல் உபதலைவர்  கே.எல்.எம்.சாதிக் திட்ட இணைப்பாளரும் நிருவாக சபை உறுப்பினருமான சமுர்த்தி முகாமையாளருமான என்.ரி..மசூர்
ஆலையடிவேம்பு பிரதேச செயலக கருத்திட்ட முகாமையாளர் கே.சத்தியப்பிரியன் வங்கிச்சங்க முகாமையாளர் சிவப்பிரியா சுதாகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதேநேரம் கருங்கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வில் ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கி வைத்தார்.

நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.