2022 உலகக்கோப்பை கால்பந்து அல்லது 2022 பிஃபா உலகக் கோப்பை (2022 FIFA World Cup) பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்துகின்ற ஒரு பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டியாகும். 2022 நவம்பர் 20 முதல் திசம்பர் 18 வரை கத்தாரில் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டியானது 22வது உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியாகும். அரபு நாடொன்றில் உலகக்கிண்ணம் முதன் முறையாக நடைபெறும் நிகழ்வாக இது இருக்கும்.[1] 2002 ஆம் ஆண்டு தென் கொரியா, யப்பான் ஆகிய நாடுகளில் நடந்த போட்டிக்குப் பிறகு முற்றிலும் ஆசியாவில் நடைபெறும் இரண்டாவது உலகக் கோப்பையாகும்.[a] 32 அணிகள் கொண்ட களத்துடன் இடம்பெறும் கடைசிப் போட்டியாக 2022 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளது; ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் 2026 போட்டிகளுக்கான களம் 48 அணிகளாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கத்தாரின் கடுமையான கோடை வெப்பம் காரணமாக, இந்த உலகக் கோப்பை நவம்பர் பிற்பகுதியில் இருந்து திசம்பர் நடுப்பகுதி வரை நடைபெறுகிறது, இது மே, சூன் அல்லது சூலை மாதங்களில் நடைபெறாத முதல் போட்டியாகவும், வடக்கு இலையுதிர்காலத்தில் நடைபெறும் போட்டியாகவும் இருக்கும். இது கிட்டத்தட்ட 29 நாட்கள் குறைக்கப்பட்ட காலக்கெடுவில் விளையாடப்படுகின்றன.[2] தொடக்க ஆட்டம் கத்தார், எக்குவதோர் அணிகளுக்கு இடையே அல்கோர் நகரில் அல் பயிட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி 2022 திசம்பர் 18 அன்று நடைபெற உள்ளது, அது கத்தாரின் தேசிய தினமாகும். பிரான்சிய அணி இப்போட்டிகளில் நடப்பு உலகக் கோப்பை வாகையாளராகப் பங்குபற்றுகின்றது


Post a Comment
Post a Comment