வி.சுகிர்தகுமார்
தமிழ் வளர தமிழ் சமூகம் மலர ஒன்றுபடுவோம் உணர்ந்து உணர்ந்து சமூகமாய் உயர்வோம் எனும் கருப்பொருளுக்கமைய அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் பேராதரவுடன் ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் இலக்கிய பேரவை நடாத்திய சிறப்பு பட்டிமன்றமும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
சுவாமி விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலைய ஸ்தாபகரும் இந்து இளைஞர் மன்ற தலைவருமான இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளையின் ஒருங்கிணைப்பில் தமிழ் இலக்கிய பேரவைத் தலைவர் கே.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் டொக்டர் குணபாலன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் துறை பேராசிரியர் செல்வி அனுசியா சேனாதிராஜா ஆலையடிவேம்பு வர்த்தகர் சங்க தலைவர் இ.ஜெகநாதன் உள்ளிட்டவர்கள் பேராளர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வினை சிறப்பிக்கும் சீராளர்களாக ஓய்வு நிலை வைத்திய அதிகாரி சித்திரா தேவராஜன் பனங்காடு பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி குணாளினி சிவராஜ் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ரவிச்சந்திரன் மத்தியஸ்த சபை தவிசாளர் துளசிமணி மனோகரராஜன் கலாசார உத்தியோகத்தர் ஜௌபர் கவிஞர் திருமதி கிருஸ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதிதிகளை வரவேற்கும் நிகழ்வோடும் வரவேற்பு நடனத்தோடும் ஆரம்பமான நிகழ்வில் மனிதனுக்கு மகிழ்ச்சியை தருவது பணமா பாசமாக எனும் தலைப்பிலான இறைபணிச்செம்மல் த.கயிலாபிள்ளை தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் ஓய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.குணாளன் அதிபர் எஸ்.மணிவண்ணன் தமிழ் இலக்கிய பேரவை தலைவர் க.கிருஸ்ணமூர்த்தி ஆகியோர் மனிதனுக்கு மகிழ்ச்சியை தருவது பணம் எனும் தலைப்பிலும் ஓய்வு நிலை விரிவுரையாளர் என்.செல்வானந்தம் ஆசிரியர் தா.ஜெயாகர் கவிஞர் எல்.சஞ்சிகா ஆகியோர் பாசம் எனும் தலைப்பில் தமது கருத்துக்;களை முன்வைத்து பட்டிமன்றத்தை சிறப்பாக நடாத்தி பெரும் வரவேற்பபை பெற்றுக்கொண்டனர்.
இதன் பின்னராக 2022 இல் நடைபெற்ற கிழக்கு மாகாண விளையாட்டு நிகழ்வில் கராத்தே போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களான சரோன்சச்சின் நிதுர்சனன் நிதுர்சிகா நிலுசிக்கா வேணுஜா பவதாரணி அக்சயன் நவக்சன் கிதுர்சன் மதன்ராஜ் உள்ளிட்டவர்களும் தடகள போட்டிகளில் சாதனை படைத்த ஜனுஜன் மற்றும் டில்ருக்சினி ஆகியோரும் அதிதிகளால் மாலை அணிவித்து நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சிறப்பு நிகழ்வாக வாழ்நாள் சாதனைகள் படைத்துவரும் அகில இலங்கை இந்துமாமன்ற உபதலைவரும் ஆலையடிவேம்பு இந்துமாமன்ற தலைவருமான வே.சந்திரசேகரம் அவர்கள் சமூக ஜோதி எனும் பட்டம் வழங்கி பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் 32 வருடகால கராத்தே கலை போதனாசிரியர் ராம் கராத்தே சங்க ஸ்தாபகர் சிகான் கே.கேந்திரமூர்த்தி அவர்கள் கராத்தே ரத்னா எனும் பட்டம் வழங்கி பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வுகளில் இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் தமிழ இலக்கிய பேரவையின் உறுப்பினர்கள் சமூக தலைவர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய அதிதிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட பட்டிமன்ற நிகழ்வை பாராட்டியதுடன் சாதனை மாணவர்கள் மற்றும் சமூக பெரியோர்களின் கௌரவிப்பினையும் மனமகிழ்ந்து உளமார வரவேற்பதாகவும் கூறினர்.

Post a Comment
Post a Comment