தற்போது நிலவும் கடும் மழை காரணமாக நாட்டின் நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கண்டி, குருணாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த பிரதேசங்களின் மலைப்பாங்கான மற்றும் சரிவான பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவுக்கான அறிகுறிகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment
Post a Comment