அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலய மாணவன் ராஜவரதன் கதுராஜ் 181 புள்ளிகளை பெற்று வலய மட்டத்தில் முதலிடம்



 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை முடிவுகளின்படி திருக்கோவில் கல்வி வலயத்தில் 144 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக வலய கல்வி அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆலையடிவேம்பு கோட்டத்தில் 78 மாணவர்களும் திருக்கோவில் கோட்டத்தில் 57 மாணவர்களும் பொத்துவில் கோட்டத்தில் 11 மாணவர்களும் சித்தியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வலய மட்டத்தில் அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலய மாணவன்  ராஜவரதன் கதுராஜ்  181 புள்ளிகளை பெற்று வலய மட்டத்தில் முதலிடத்தை பிடித்துக்கொண்டார்.

இதேநேரம் ஆலையடிவேம்பு கோட்டத்தில் திருவள்ளுவர் வித்தியாலயத்தில் 16 மாணவர்களும் மற்றும் அன்னை சாரதா வித்தியாலயத்தில் 16 மாணவர்களும் விவேகானந்தா வித்தியாலயத்தில் 15 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன்  திருக்கோவில் கல்வி வலயத்தில் குமர வித்தியாலயத்தில் 16 மாணவர்களும் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் 14 மாணவர்களும் சித்தியடைந்து வலயத்தில் அதி கூடிய மாணவர்கள் சித்தியடைந்துள்ள பாடசாலைகள் எனும் பெருமையினை பெற்றுள்ளது.

இந்நிலையில் திருக்கோவில் கல்வி வலயத்தில் கடந்த வருடம் 133 மாணவர்கள் சித்திடைந்த நிலையில் இம்முறை 144 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய 37 மாணவர்களுள் 36 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன் 41 வீதமான மணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் திருக்கோவில் கல்வி வலயம் பெறுபேறுகளின் அடிப்படையில் மாகாண மட்டத்தில் 3ஆம் நிலையினை பெற்றுள்ளதுடன் தேசிய ரீதியில் 37ஆவது இடத்தினை பெற்று முன்னேற்றம் அடைந்துள்ளமை பாராட்டத்தக்கது.

ஆயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சில பாடசாலைகளில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.