நீதிமன்ற நடவடிக்கைளின் போது, இன்று கைதி ஒருவருக்கு பகல் உணவை கொண்டு வந்து, நீதிமன்ற சிறைக்கூடத்திற்கு வெளியில் இருந்து தனது பாதரட்சையில் இருந்து புகையிலை பீடியினை வீசிய நபருக்கு, 3 மாத கடூழிய சிறைத் தண்டனையைையும், ரூபா 1500.00 தண்டப் பணத்தையும் விதித்து அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி கெளரவ ஹம்சா அவர்களால் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமுறைக் கட்டளைச் சட்டப் பிரிவு 55(1) (அ) இனை மீறியமைக்கான குற்றச்சாட்டானது குறித்த சந்தேக நபருக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்டது.
குறித்த சந்தேக நபர் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தமது சட்டத்தரணிகளான ஜெனீர், றிஸ்வான், அஸ்மியா ஆகியோர் மூலமாக குற்றவாளியெனத் தெரிவித்ததை அடுத்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
குறித்த குற்றவாளி ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.


Post a Comment
Post a Comment