அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அத்தியட்சகருக்கு பிரியாவிடை


 


(Reports/Maathavan)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் , வைத்திய அத்தியட்சகராக  கடந்த 4 மாதங்களாக பணிபுரிந்த, Dr Paul Roshan  தனது மேற்படிப்புக்காக கொழும்பு செல்கின்றார்.


வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினால்,இவருக்குரிய பிரியாவிடை வைபவம் இன்று இரவு இராப் போஷணத்துடன் அக்கரைப்பற்றில் வழங்கப்பட்டது.

அபிவிருத்திக் குழுத் தலைவர் Dr.றகீஸ்து தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. 

பிரியாவிடை பெற்றுச் செல்லும் வைத்திய அத்தியட்சகருக்கு பொன்னைடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

குறுகிய காலத்தில் மக்கள் மனம் வென்ற வைத்திய அத்தியட்சதரின் சேவையைப்  வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பராட்டிப் பேசினர்.

தனது கடமையை சிறப்பாக செய்வதற்கு  துணை புரிந்த அனைவருக்கும் வைத்திய அத்தியட்சகர் நன்றி  தெரிவித்தார்.