பயனாளிகளை சந்தித்தல்




 AEDU -UK” இன் அதிகாரிகள் - வைத்திய கலாநிதி..அமிர்தலிங்கம் பகீரதன்திரு.சோமசுந்தரம்திரு.பாண்டியன் மற்றும் இலங்கை ஒருங்கிணைப்பாளர் திரு.தி தில்லையம்பலம் வரதன்திருகோணமலை ஒருங்கிணைப்பாளர் வைத்திய கலாநிதி.E.G.ஞானகுணாளன் மற்றும் பிற அதிகாரிகள் திருகோணமலை மாவட்டத்தில் கல்வி புலமைப்பரிசில் பெறும் பாடசாலை மாணவர்களை 12.02.2023 அன்று கட்டைபரிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில்  சந்தித்தனர்..

அவர்கள் கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விளக்கிகல்வித் தேவைக்கு இந்த உதவியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர். 10 ஆண்டுகளுக்கு முன் இந்த "AEDU" பயணம் 50 மாணவர்களுடன் மாதம் ரூ.2,000/=  உதவியுடன் ஆரம்பிக்கப் பட்டுபின்னர் 75 மாணவர்களாக உயர்ந்துதற்போது சுமார் 100 மாணவர்களுக்குரூ.4,000/= உதவி வழங்கப் படுகிறதுஇந்த மாணவர்களில் ஏழு பேர் பல்கலைக்கழகத்துக்கு  உள் வாங்கப் பட்டுள்ளார்கள்அவர்களின் தேவைக்கு ஏற்ப உதவி வழங்கப் படுகிறது,